Friday, February 6, 2015

எந்திரப் படகு ஓட்டும் நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்



actor m.s.baskar
ராதாமோகன் இயக்கும் ’உப்புக்கருவாடு’ படத்தில் நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு காசிமேடு கடற்கறை பகுதியில் நடைபெற்றது. 

இந்தப் படத்திற்காக இரண்டு இயந்திர படகுகளை வாடகைக்கு எடுத்துச் சென்று நடு கடலில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். 

இதில் ஒரு இயந்திர படகை தான் ஓட்டுவதாக கூறி, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஓட்டிப் பார்த்திருக்கிறார். பிறகு அவரே அன்று முழுவதும் ஓட்டுவதற்கு படகுக் காரர் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ஏற்கனவே படகு ஓட்டி அனுபவம் பெற்றவர் போல அவர் ஓட்டிச் சென்றதைப் பார்த்த, சக இயந்திர படகு ஓட்டுனர்கள், இவரது திறமையை கண்டு வியந்து, பாராட்டி உள்ளனர்.

ஏற்கனவே குதிரை சவாரி செய்து பிரமிக்க வைக்கும் எம்.எஸ்.பாஸ்கர், இப்போது எந்திரப் படகு ஓட்டுவதிலும் வல்லவராக இருக்கிறார்.

-      ஜி.பாலன்
செய்தி தொடர்பாளர்
செல்போன்: 93833 88860

Sunday, August 3, 2014

ஹீரோவா? ஆளைவிடு சாமி! - எம்.எஸ்.பாஸ்கர்

காமெடியில் மட்டுமல்ல, குணச்சித்திர வேடத்திலும் தன்னால் அசத்தமுடியும் என்று 'அரிமா நம்பி'யில் நிரூபித்திருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். தொடர்ந்து 'உத்தமவில்லன்’, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 'வை ராஜா வை’, விஜய் ஆண்டனி தயாரித்து நடிக்கும் 'இந்தியா பாகிஸ்தான்’, எழில் இயக்கத்தில் ஒரு படம் என்று பிஸியாக இருந்தவரிடம் பேசினேன்.

''80-களிலேயே சினிமாவில் நடிச்சிருக்கீங்க. இடையில ஏன் ஆளையே காணோம்?'

''1987-ல 'திருமதி ஒரு வெகுமதி’ படத்துல ஒரு சில சீன்கள்ல தலை காட்டியிருப்பேன். அப்புறம் நடிக்கணும்னு ஆசைதான். எத்தனையோ இயக்குநர்கள்கிட்ட கேட்டுப் பார்த்துட்டேன். யாரும் வாய்ப்பு கொடுக்கலை. 'ஒரு படம் கொடுத்தீங்கனா, ஒரு படத்துல ஃப்ரீயா நடிச்சுத் தர்றேன்’னு கூட அறிவிச்சுப் பார்த்துட்டேன். ஒரு பிரயோஜனமும் இல்லை. அதனால டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா என்னோட கேரியரைப் பார்த்துக்க ஆரம்பிச்சேன். அப்போதான், சின்னத்திரை வாய்ப்பு வந்தது. 'பட்டாபி’ கேரக்டர் இன்னைக்கு வரைக்கும் எல்லாரோட நினைவிலேயும் இருக்கும். அந்த அளவுக்கு சின்னத்திரையில என்னை நிரூபிச்சேன். சினிமா தாமதத்துக்கு நான் காரணம் கிடையாது.'

''இதுவரை நடித்ததில் ரொம்பப் பிடிச்ச கேரக்டர்?'

'' 'மொழி’ படத்துல ஆரம்பிச்சு, சமீபத்துல ரிலீஸான 'அரிமா நம்பி’ படத்துல நடிச்ச சின்ன கேரக்டர் வரை நான் நடிச்ச எல்லா கேரக்டருமே எனக்குப் பிடிச்ச கேரக்டர்தான். தவிர, ஒரு படத்துல எனக்கான கேரக்டர் எனக்கு நெருக்கமா, ரொம்பப் பிடிச்ச கேரக்டரா இருந்தா மட்டும்தான் நான் நடிக்கவே சம்மதிப்பேன்.'

''டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா இருக்கும்போது நடந்த சுவாரஸ்யங்கள்..?'

'ஜீஸஸ் ஆஃப் நாசரேத் (Jesus of Nazareth) டெலிஃபிலிமுக்கு நானும் நண்பர் ஒருவரும் டப்பிங் பேசிட்டு இருந்த சமயம். 'இவர்கள் ரோமன் மன்னருடைய போர் வீரர்கள்’னு நானும், 'தீர்க்கதரிசியைப் பிடித்துச் செல்ல வந்திருக்கிறார்கள்’னு நண்பரும் வசனங்களைப் பேசிட்டோம். 'கொஞ்சம் சாதாரணமான வார்த்தைகளாப் பேசலாமே?’னு வசனகர்த்தா சொல்ல நண்பரும் நானும் சரினு சொல்லி, அதே வசனத்தை சாதாரணமா பேசலாம்னு 'ரெடி’ சொன்னோம். 'இவங்க ரோமன் மன்னரோட வீரர்கள்’னு நான் சொல்ல, நண்பரோ 'தீர்க்கதரிசியைப் புடிச்சினு போக வந்திருக்காங்க’னு பேசுனாரே பார்க்கணும்? வசனகர்த்தா சிரிச்சு, சிரிச்சு டேபிள்லேயே சாஞ்சுட்டார். 'யோவ்... கலோக்கியலா பேசுய்யானா ஜீஸஸை மந்தைவெளிக்கு கூட்டிக்கிட்டு வந்துட்டீங்களே’னு அவரைக் கலாய்ச்சேன். இப்படி நிறைய விஷயங்கள் இருக்கு.'

''சரி... காமெடியன்களெல்லாம் ஹீரோ ஆகுற சீஸன் இது. உங்களை எப்போ ஹீரோவா பார்க்கலாம்?'

'தமிழ்நாட்டுல ஏற்கெனவே சுனாமி, இயற்கை இடர்பாடுகள், அதிர்ச்சி தரக்கூடிய சோக நிகழ்வுகள்னு பல சம்பவங்கள் நடந்து, நம்ம மக்கள் எல்லோரும் கதிகலங்கிப் போய் இருக்காங்க. இந்த நேரத்துல 'நீயும் ஹீரோவா நடிச்சு மக்களோட பிஞ்சு மனசை நச்சு நச்சுனு மிதிக்கணுமா?னு கேள்வி கேட்டு 'நீ நல்ல நடிகன்’னு பெயர் வாங்கினாலே போதும் பாஸ்கரா’னு என் மனசாட்சி அழுதுட்டு இருக்கு. இன்னைக்கு இல்லை, என்னைக்குமே ஹீரோவா நடிக்க மாட்டேன். பயப்படாதீங்க!'

- செந்தில்குமார்

படங்கள்: வி.செந்தில்குமார்

THANKS: VIKADAN

Friday, August 16, 2013

Actor MS Baskar Profile

M. S. Baskar (born 1957) is an Indian actor. A former theatre artiste, he has appeared in supporting roles and as a comedian in Tamil TV series and more recently in Tamil films. He is probably best known for his performances in the series Chinna Papa Periya Papa and Selvi and in the films Sivakasi and Mozhi. In addition to acting, Bhaskar is a dubbing artiste and occasional playback singer as well.

M. S. Bhaskar, Is born in Muthupettai, Is Father Name Somu Thevar. Mother Sathyabama. One Younger Brother and Two Sister. His elder sister Hemamalini, She is One of the famous duding artiste in Tamil Film Industry. Most of the top heroin she only give the voice. During this period, Baskar began as a dubbing artiste especially for dubbing Telugu films into Tamil where he spoke the comedians lines. He has dubbed for over 1000 films and he himself once said that dubbing for Kamaraj was the toughest dubbing job for him. Even today he is used as a dubbing artiste for English Films (Dubbed in Tamil).

Acting career Television
When the dramatic society ended in 1992 - Baskar moved to Teleserials in DD1 and DD2 such as Nam Kudumbam and Vizhudugal, before he essaying roles in Sun TV-serials such as Ganga Yamuna Saraswati and Mayavi Marichan. He then landed a role in the very popular comedy series Chinna Papa Periya Papa, in which he essayed the role of a docile husband and father-in-law. This as well as the series Senior Junior, both aired on Sun TV, made possible his breakthrough. Subsequently, he starred in popular series on Sun TV such as Selvi and Arasi, making him a household name in Tamil Nadu.

Acting career Films
Baskar made his film debut in 1987 already, enacting a small role in the film Thirumathi Oru Vegumathi. This was followed by several films in the 90's, in which he appeared in very minor or small roles including films like Friends and Thamizhan. He then graduated to supporting roles in films like Sadhu Mirandal, Sivaji: The Boss, Dasavathaaram, Santosh Subramaniam and Mozhi. As of November 2009, he has acted in over 75 Tamil films.  A regular actor in directors Perarasu and Radha Mohan's films, he has starred in all their films.

Personal life
Baskar is married and has one son(Adithya, 9th standard) and one daughter(Ishwarya studying B.Sc. Visual communication in Loyola College chennai).

Actor M.S.Baskar, A1 – Amuthibi Flat, 34/1(76/1) Vinayagam street, Sree Venkateshaa Nagar, Virugambakkam, Chennai, India. Pincode – 600 094.  (Balan PRO – 093833 88860)

Movie List
1987  Thirumathi Oru Vegumathi, 
1987  Makkal En Pakkam                       
1990  Salem Vishnu                      
2001  Kottai Maariyamman                   
2001  Dumm Dumm Dumm                  
2002  Thamizhan              
2002  Ivan               
2002  University                            
2002  Junction                               
2002  Mutham                               
2003  Ragasiyamai                        
2003  Kounder Veetu Maappillai                                  
2003  Military                                
2003  Anbe Anbe                          
2004  Gajendra                             
2004  Engal Anna                          
2004  Machi                                   
2004  Bose   Vedimuthu              
2004  Azhagiya Theeye    Annachi                    
2005  Thirupaachi  Tharakar                  
2005  Sukran                                  
2005  Amudhey                             
2005  Chinna                                  
2005  Sivakasi                                
2006  Idhaya Thirudan                            
2006  Oru Kaadhal Seiveer                                
2006  Azhagai Irukkirai Bayamai Irukkirathu                                   
2006  Thirupathi                           
2006  Ilavattam                             
2006  Kedi                           
2006  Dharmapuri                        
2006  Varalaaru     Mental                      
2007  Thirutham                           
2007  Mozhi           
(Winner, Tamil Nadu State Film Award for Best Character Artiste (Male)
2007  Muni                         
2007  Sivaji: The Boss                  
2007  Kireedam                             
2007  Azhagiya Thamizh Magan                                  
2007  Machakaaran                                 
2008  Pazhani                                
2008  Pirivom Santhippom                                
2008  Sadhu Miranda                              
2008  Anjathe                                
2008  Vellithirai     
2008  Santosh Subramaniam    
2008  Arai En 305-il Kadavul                 
2008  Azhaipithazh                                  
2008  Iyakkam                               
2008  Kuselan                                
2008  Dasavathaaram     
2008  Sutta Pazham                                 
2008  Dhanam                               
2008  Saroja           
(Special appearance and dubbing voice for Brahmanandam)
2008  Theeyavan                          
2008  Dindigul Sarathy                
2008  Panchamirtham                             
2008  Kadhalna Summa Illai                              
2009  Innoruvan                           
2009  Naalai Namadhe                
2009  Guru En Aalu                                  
2009  Masilamani             
2009  Manjal Veyil                        
2009  Thoranai                              
2009  Sirithal Rasippen                
2009  Eesa                           
2009  Unnaipol Oruvan              
2009  Suryan Satta Kalloori                   
2010  Thamizh Padam                 
2010  Thambikku Indha Ooru                           
2010  Irumbu Kottai Murattu Singam             
2010  Veerasekaran                                 
2010  Kola Kolaya Mundhirika                          
2010  Madrasapattinam                         
2010  Irandu Mugam                               
2011  Kaavalan                              
2011  Payanam                 
2011  Thambikottai          
2011  Ko                              
2011  Eththan                                
2011  Deiva Thirumagal  
2011  Velayudham                                   
2011  Puli Vesham Senthil                      
2011  Markandeyan                                
2012  Oththa Veedu                                
2012  Konjum Mainakkale                                 
2012  Krishnaveni Panjaalai                               
2012  Thaandavam          
2012  Thiruthani                           
2012  Puthumugangal Thevai                           
2013  Chandhamama                  
2013  Karuppampatti                              
2013  Soodhu Kavvum                
2013  Nagaraja Cholan MA, MLA                                 
2013  Theekulikkum Pachaimaram                             
2013  Ninaivil Nindraval              
2013  Varusanaadu                      
2013  Sutta Kadhai                       
2013  Pesu    
          
Upcoming Films  
  
2013  Oru Vaarthai Pesu                        
2013  Ragalaipuram                                 
2013  Sollithara Naanirukkiren                         
2013  Isai                             
2013  Iruvar Ullam
2013  saravana poikaiyil

2013  Director Selva Movie